மிட்டாய் கவிதைகள்!

கல்லூரி கருத்தரங்கு

July 23, 2013

TellerSymposium 02

தூக்கம் தொலைத்து
துக்கம் மறந்து
திரண்ட கூட்டத்தில்
திரவியம் மறந்து

வரண்டிருந்த நாவிற்கு
வக்கனையாய்ச் சோறின்றியும்
வந்தோரை வரவேற்க
வரவேற்பில் மலர்முகங்கள்!

பெருக்கியின் ஓலம்
பெருக்கெடுத் தோட,
பெண்ணின் அசைவிற்கும்
செவிசாய்ந் தாட,

அறிவுச் சோதனையாய்
அரங்கேறிய போட்டிகளால்
ஓயாத கால்களுக்கு
ஓய்வாக முத்தமிழ்!

வருங்காலம் சிலநலமாய்
நான்சொல்லக் கேட்க,
வந்தோரும் வென்று
பரிசல்லிச் செல்ல,

பிறநிகழ்வுகள் பிழையுமின்றி
பிரச்சனையும் ஏதுமின்றி
சிறைக்குள்ளே முடிந்த
சுகமானதொரு கருத்தரங்கு!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்